ஏரிபேட்டையில் வருவாய் மானியத்தில் இருந்து ரூ.2 கோடி மதிப்பீட்டில் நவீன எரிவாயு தகனம் மேடை : கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி திறந்து வைத்தார்

பதிவு:2024-03-04 12:39:56

திருவள்ளூர் மார்ச் 04 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கீழ்முதலம் பேடு ஊராட்சி ஏரிபேட்டையில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியத்திலிருந்து ரூ.2 கோடி மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடையினை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் உமா மகேஸ்வரி, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஓ.என்.சுகபுத்ரா ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்.

கும்முடிப்பூண்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு கீழ் முதலமைச்சரே ஊராட்சி ஏரிபேட்டை கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் மானியம் திட்டம் 2021 2022 ஆம் ஆண்டு ரூ.1,93,20,000 மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன எரிவாயு தகன மேடை, குளியலறை மற்றும் சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இந்த இந்த நவீன எரிவாயு தகன மேடையினை சுற்றுவட்டத்திற்கு உட்பட்ட 10 ஊர் பொதுமக்கள் பயன்படுத்தி கொள்வார்கள்.

இதில் மாவட்ட திட்ட அலுவலர் முருகன், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அமிழ்தமன்னன், சந்திரசேகர், கீழ்முதலம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கோ.நமச்சிவாயம் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.