3-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா : சிந்தனை அரங்கத்தில் டாக்டர். வெ.இறையன்பு (ஒய்வு ) "திருவள்ளுவரும் ஷேக்ஸ்பியரும், என்ற தலைப்பில் கருத்துரை :

பதிவு:2024-03-04 12:43:09



3-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா : சிந்தனை அரங்கத்தில் டாக்டர். வெ.இறையன்பு (ஒய்வு ) "திருவள்ளுவரும் ஷேக்ஸ்பியரும், என்ற தலைப்பில் கருத்துரை :

3-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா : சிந்தனை அரங்கத்தில் டாக்டர். வெ.இறையன்பு (ஒய்வு )

திருவள்ளூர் மார்ச் 04 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 110 புத்தக விற்பனையாளர்கள் அரங்குகள் அமைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த 3-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2024, 9 ஆம் நாள் நிகழ்வாக சிந்தனை அரங்கத்தில் டாக்டர். வெ.இறையன்பு (ஒய்வு ) "திருவள்ளுவரும் ஷேக்ஸ்பியரும், என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்ச்சியும், சுந்தர ஆவுடையப்பன் "திருவள்ளுவரும் இளங்கோவடிகளும்" என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்ச்சியும், செந்தில் கணேஷ் ராஜலட்சுமி குழுவினரின் மண்மணம்- மக்களிசை நிகழ்ச்சியில்-மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் நடைபெற்றது. முன்னதாக பள்ளி? கல்லூரி மாணவ,மாணவியர்கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது பின்னர் கலைநிகழ்ச்சியில் பங்குபெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டிமாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் பாராட்டு சான்றிதழ், கேடயம் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் டாக்டர். வெ. இறையன்பு (ஒய்வு ), சுந்தர ஆவுடையப்பன், செந்தில்கணேஷ் ராஜலட்சுமி ஆகியோர்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக -மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சிறப்பு செய்தார். இந்நிகழ்வில் மண்டல இணை இயக்குனர் கால்நடை பராமரிப்புத்துறை இரா. பாலகிருஷ்ணன், செயற்பொறியாளர் கட்டட(கட்டுமானம் ம பராமரிப்பு) கோட்டம் விஜய் ஆனந்த் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.