பதிவு:2024-03-04 12:49:38
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் : ஆர்.கே.பேட்டையில் அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 04 : மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என சுமார் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டத்தில் 1405 மையங்களில் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் மற்றும் 5 முதல் 6 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், தனியார் மருத்துவமனைகள் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும் மக்கள் அதிகமாக கூடும் ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடி, வழிப்பாட்டு தளங்கள், சோதனைச்சாவடி ஆகிய இடங்களில் திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 69 பயண வழி மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும் எளிதாக செல்ல முடியாத மையங்களுக்கு 42 நடமாடும் மருத்துவக்குழு மூலம் வீடு தேடி போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். அதன்படி திருவள்ளூர் மாவட்டம் ஆர் கே பேட்டை பேருந்து நிலையம் அருகில் போலியோ சொட்டு மருந்து முகாமை கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர். காந்தி தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 1405 மையங்களில் 2 லட்சத்து 55 ஆயிரத்து 888 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மாவட்டம் முழுவதும் 1516 முகாம்களில் 6127 சுகாதாரப் பணியாளர்கள் போலியோ சொட்டு மருந்து வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் திருத்தணி எம்எல்ஏ எஸ்.சந்திரன், மாவட்ட சுகாதார ஆய்வாளர் பிரியா ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் அதே போல் திருவள்ளூர் நகராட்சியில் 27 வார்டுகளில் உள்ள 5 வயதுக்குட்பட்ட 4320 குழந்தைகளுக்கும் 120 பணியாளர்கள் மூலம் இந்த போலியோ சொட்டு மருந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில் நகராட்சி ஆணையர் சுபாஷினி குழந்தைகளுக்கு சொட்டுமருந்து வழங்கி தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி மருத்துவர் ஸ்டெல்லா பிரசன்ன குமாரி சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.