திருவள்ளூரில் நில அளவையர்கள் ஒன்றிப்பு சார்பில் நில அளவர் பவ்யா மீது தாக்குதல் நடத்திய நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-03-07 07:40:46

திருவள்ளூர் மார்ச் 05 : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் பெரியகோட்டை கிராமத்தில் நில அளவை மேற்கொண்ட நில அளவர் வீ.பவ்யாவை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட நில அளவை ஒன்றிப்பு சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் ஆர்.எம்.செந்தில்குமரன் தலைமை தாங்கினார். கோட்ட செயலாளர் ஆர்.கோவிந்தராஜ் வரவேற்றார். மாவட்ட துணஐ தலைவர் செ.ஜோதி முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் கோட்ட தலைவர் பு.த.எஸ்வந்த்தாஸ் கண்டன உரையாற்றினார். நில அளவர் வீ.பவ்யாவை தகாத வார்த்தைகளால் பேசியும் கடுமையான தாக்குதல் நடத்திய ரவுடி முருகானந்தனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நில அளவைத் துறையில் பணி செய்யும் பணியாளர்களுக்கு பணி சுமை அதிகமாகவும், உயிருக்கே உத்திரவாதம் இல்லாமல் உயிர் பயத்துடனே பணி செய்ய வேண்டிய சூழல் நிலவுகிறது. எனவே நில அளவைத்துறையினருக்கு பாதுகாப்பு அளிக்க தமிழ்நாடு அரசு முன்வரவேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது. இதில் நிர்வாகிகள் இ.ரா.குமரன், ப.அரவிந்தன், சரத்குமார், மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கோட்ட பொருளா்ளர் நாராயணன் நன்றி தெரிவித்தார்.