திருவள்ளூரில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு :

பதிவு:2024-03-07 07:44:35



திருவள்ளூரில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு :

திருவள்ளூரில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் : முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏ.க்கள் பங்கேற்பு :

திருவள்ளூர் மார்ச் 05 : திருவள்ளூரில் ஒருங்கிணைந்த அதிமுக இளைஞர் பாசறை இளம் பெண்கள் பாசறை மகளிர் அணி மாணவர் அணி சார்பில் மருத்துவக் கல்லூரி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பிவி.ரமணா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், நிர்வாகிகள் சூரகாபுரம் சுதாகர், ராமஞ்சேரி மாதவன், திருவாலங்காடு சக்திவேல், திருவள்ளூர் நகர செயலாளர் ஜி.கந்தசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் பா பெஞ்சமின், மாதவரம் மூர்த்தி, அப்துல் ரஹீம், மாவட்ட செயலாளர்கள் பி பலராமன், அலெக்ஸாண்டர், அதிமுக அமைப்பு செயலாளர்கள் திருத்தணி கோ.அரி, திருவேற்காடு பா சீனிவாசன், முன்னாள் எம்பி வேணுகோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

இதில் முன்னாள் எம்எல்ஏ.க்கள், குப்பன், மணிமாறன்,. விஜயகுமார், நிர்வாகிகள் கேபிஎம் எழிலரசன், பி.வி.பாலாஜி, எஸ்.ஏ.நேசன், ஞானக்குமார், இன்பநாதன், விஜயலட்சுமி ராமமூர்த்தி, ஆர்டிஇ சந்திரசேகர், நரேஷ் குமார் வி ஆர் ராம்குமார் சுஜாதா சுதாகர் வெங்கட்ரமணா, விஜயகாந்த் வினோத் குமார் ஜெயின், நகரமன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், சுமித்ரா வெங்கடேசன், மற்றும் கேபிஎம் எழிலரசன், ஜோதி, ஜெயாநகர் குமரசேன், தியாகு உள்பட 2 ஆயிரத்துற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.