பதிவு:2024-03-07 07:49:52
திருவள்ளூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சுகாதாரமற்ற பணி புரியும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் :
திருவள்ளூர் மார்ச் 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக சுகாதாரமற்ற பணி புரியும் பணியாளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தாட்கோ திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.25, 000 இயற்கை மரண உதவித்தொகை காசோலையினையும், 2 பயனாளிகளுக்கு ரூ.2500 கல்வி உதவித்தொகைக்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் குணசேகர், தாட்கோ மேலாளர் கே.இந்திரா உறுப்பினர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.