பதிவு:2024-03-07 07:51:17
சுதந்திரப் போராட்ட தியாகி மகனுக்கு மாவட்ட ஆட்சியர் விருப்ப நிதியிலிருந்து ஆட்டோ : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் மார்ச் 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தனது விருப்ப நீதியிலிருந்து வாங்கப்பட்ட ஆட்டோக்கான சாவியினை சுதந்திரப் போராட்ட தியாகி எஸ்.சுப்பிரமணியன் என்பவரின் மகன் ரமேஷ் என்பவரிடம் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர். நடுகுத்தகை, அருந்ததியர் பாளையம் கதவு எண் 885, விநாயகர் கோவில் தெரு என்கின்ற முகவரியில் வசித்து வரும் திருமதி.சாந்தா க/பெ சுதந்திர போராட்ட தியாகி எஸ்.சுப்பிரமணியம் என்பவரின் மனைவியாவார். அவர் கடந்த 19.02.2024ம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாளன்று அளித்த மனுவில், தனது கணவர் எஸ்.சுப்பிரமணியம் என்பவர் சுதந்திர போராட்ட தியாகி எனவும், தனது குடும்பம் மிகவும் வறுமை நிலையில் உள்ளதாகவும், பிழைப்பு நடத்த வழி இல்லாமல் இருப்பதாகவும். மேலும், தனது மகன் ரமேஷ் என்பவர் வேலையில்லாமல் வாடகை ஆட்டோ ஓட்டில் கொண்டிருப்பதாகவும், தனது மகன் ரமேஷ் சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு. போதிய நிதி வசதி இல்லாத காரணத்தால், தங்களால் சொந்தமாக ஆட்டோ வாங்க இயலவில்லை எனவும். எனவே. சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு நிதி உதவி கேட்டு மனு வழங்கியிருந்தார்.
இம்மனுவின் மீது, மாவட்ட ஆட்சியரால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, மாவட்ட தொழில் மையம் மற்றும் முன்னோடி வங்கி மேலாளர் மூலமாக மானியத்தில் ஆட்டோ வழங்க பரிந்துரை செய்யப்பட்டது. இந்த ஆட்டோவின் மொத்த விலை ரூ.3,20,000 ஆகும். இதில், பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் மூலமாக ரூ..80,000 மானியமாகவும், மனுதாரரின் பங்களிப்பாக ரூ.20,000 மும், மீதமுள்ள ரூ.2,20,000 ற்கு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தன் விருப்ப நிதியிலிருந்து, காசோலையாக வழங்கப்பட்டு, சுதந்திர போராட்ட தியாகி எஸ்.சுப்பிரமணியம் என்பவரின் மகன் ரமேஷ் என்பவருக்கு சொந்தமாக ஆட்டோக்கான சாவியினை , மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் வழங்கினார்.
இதில் தனித்துணை ஆட்சியர் (சபாதி) கணேசன், மாவட்ட தொழில் மையம் பொது மேலாளர்.சேகர்,உதவி ஆணையர் கலால் ரங்கராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.