பதிவு:2024-03-07 07:53:13
திருவள்ளூரில் மனவளர்ச்சி குன்றியோர் மற்றும் காதுகேளாருக்கான ஒரு நாள் இன்ப சுற்றுலாவாக வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லும் வாகனம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் மார்ச் 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து மன வளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர்கள் 40 மாற்றுத்திறனாளி நபர்களுக்கு இனிப்புகள் வழங்கி ஒரு நாள் இன்ப சுற்றுலாவாக வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லும் வாகனத்தினை துவக்கி வைத்து இனிப்புகள் வழங்கி அனுப்பி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஹோப் மனவளர்ச்சி குன்றியோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் மற்றும் லைப் எய்டு சென்டர் காது கேளாதோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம் சேர்ந்து சிறப்பாசிரியர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுடன் மொத்தம் 40 மாற்றுத்திறனாளி நபர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலமாக வண்டலூர் உயிரியல் பூங்கா செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதில் மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன். ஆரம்ப நிலை பயிற்சி மையம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உள்ளனர்.