திருவள்ளூரில் மகளிர் சுய உதவிக் குழுக்களால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவகத்தின் முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் துவக்கி வைத்து, உணவு அருந்தினார்

பதிவு:2024-03-07 07:55:20

திருவள்ளூர் மார்ச் 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் மகளிர் திட்டத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட சிறுதானிய உணவகத்தினை முதல் விற்பனையை துவக்கி வைத்து உணவு அருந்தினார்.

இந்த சிறுதானிய உணவகத்தில் திணை, கருப்பு உளுந்து, வரகு, கேழ்வரகு, சாமை, ராகி,குதிரைவாளி, கம்பு ஆகிய சிறுதானியங்களை கொண்டு இட்லி பொங்கல், உப்புமா, சாம்பார் சாதம், வெஜ் பிரியாணி, தயிர் சாதம், தோசை, கிச்சடி,கம்பங்கூழ் போன்ற பல்வேறு உணவு தானிய வகைகள் கொண்டு தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு செய்யப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து வகையான சிறுதானியங்கள் சிறுதானிய உணவுகள் சிறுதானிய மதிப்பு கூட்டு பொருட்கள் இங்கே விற்பனை செய்யப்பட உள்ளது என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.

இதில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஓ.என்.சுகபுத்ரா, மகளிர் திட்ட இயக்குனர் செல்வராணி, உணவு பாதுகாப்பு அலுவலர் ஜெகதீஸ் சந்திரபோஸ், உதவி திட்ட அலுவலர்கள் கிறிஸ்டி , ராமதாஸ், மகளிர் சுய உதவிக் குழுக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.