பதிவு:2022-05-17 12:11:18
வெங்கத்தூர் ஊராட்சியில் 19 இடங்களில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாட்டம் :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கத்தூர் ஊராட்சியில் அதிமுக சார்பில் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஞானகுமார் ஏற்பாட்டில் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா கலந்து கொண்டு வெங்கத்தூர் ஊராட்சியில் கிளை செயலாளர்கள் முன்னிலையில் புரட்சித் தலைவர் எம்.ஜி. ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அதிமுக கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
வெங்கத்தூர் ஊராட்சியில் உள்ள 19 கிளைகளிலும் நடைபெற்ற அதிமுக கொடியேற்று விழாவில் திருவள்ளூர் மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன், அவைத்தலைவர் இன்பநாதன்,கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர்,அதிமுக நிர்வாகிகள் சிற்றம் சீனிவாசன், பூபாலன், ஆர்.டி.இ. சந்திரசேகர் உமாபதி,திருவள்ளூர் மாவட்ட பிரதிநிதி டி.ஜெயலட்சுமி உள்ளிட்ட ஏராளமான அதிமுக நிர்வாகிகள் அதிமுக கொடியேற்று விழாவில் கலந்து கொண்டனர்.