பதிவு:2024-03-07 07:57:14
திருவள்ளூர் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் மார்ச் 05 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 465 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 136 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 94 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 119 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 91 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 127 மனுக்களும் என மொத்தம் 533 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் தேசிய அறக்கட்டளை சட்டம் 1999 ன் கீழ் புற உலக சிந்தனை அற்றோர், அறிவுசாற் குறைபாடுடைய, மூளைமூடக்குவதாம் மற்றம் பல்வகை செயல்படுகிறது. உள்ளூர் நிலை குழு மாற்றுத்திறனுடைய நலனுக்காக திருவள்ளூர் மாவட்டம். மாவட்ட ஆட்சியராகவும், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் செயலராகவும் தேசிய அறக்கட்டளை பதிவு பெற்ற ஆஷா அறிவுசாற் குறைபாடுடைய குழந்தைகளுக்கான பள்ளியை தொண்டு நிறுவன உறுப்பினராகவும் கொண்டு செயல்படுகிறது.
மேற்கண்ட தேசிய அறக்கட்டளை மூலமாக 26 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்றுகளும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.19656 மதிப்பீட்டில் சலவைப் பெட்டிகளும், விடுதிகளில் நல்ல முறையில் பராமரி த்ததற்காகவும் விடுதியில் தங்கிப் பயிலும் மாணவர்கள் கல்வி கற்றுக் கொடுத்து அதிக மதிப்பெண் பெற ஊக்குவித்தற்காகவும் 2022-2023 ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த காப்பாளராக தேர்வு செய்து முதல் பரிசு ரூ.10,000 ம், இரண்டாம் பரிசு ரூ. 5000,ம் மூன்றாம் பரிசு ரூ. 3000ம், மாவட்ட ஆட்சியர் விருப்புரிமை நிதியிலிருந்து ரூ. 40,000 மதிப்பிலான மடிக்கணினியினை மாற்றுத்திறனாளியான மகேஸ்வரி என்பவருக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார். ஆக மொத்தம் ரூ.77,656 மதிப்பில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார்.
கூட்டத்தில் உதவி பயிற்சி ஆயுஷ் வெங்கட் வதஸ், தனித் துணை ஆட்சியர் (சபாதி) வி.கணேசன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மற்றும் பல்வேறு சார்ந்த உயர் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.