3-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா : 10 ஆம் நாள் நிகழ்வாக பாரதி கிருஷ்ணகுமார் "உடம்போடு உயிரிடை நட்பு" என்ற தலைப்பில் கருத்துரை :

பதிவு:2024-03-07 07:58:35



3-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா : 10 ஆம் நாள் நிகழ்வாக பாரதி கிருஷ்ணகுமார் "உடம்போடு உயிரிடை நட்பு" என்ற தலைப்பில் கருத்துரை :

3-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா : 10 ஆம் நாள் நிகழ்வாக பாரதி கிருஷ்ணகுமார்

திருவள்ளூர் மார்ச் 05 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து நடத்தும் 110 புத்தக விற்பனையாளர்கள் அரங்குகள் அமைத்து விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த 3-ஆவது திருவள்ளூர் புத்தகத் திருவிழா-2024,10 ஆம் நாள் நிகழ்வாக சிந்தனை அரங்கத்தில் பாரதி கிருஷ்ணகுமார் "உடம்போடு உயிரிடை நட்பு" என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்ச்சியும் அருள் பிரகாசம் வாழ்க்கையை வாசிப்போம் என்ற தலைப்பில் கருத்துரை நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. பின்னர் 3 வது திருவள்ளூர் புத்தகத் திருவிழாவில் 10 நாட்கள் சிறப்பாக பணியாற்றிய அரசு அலுவலர்கள் அனைவரையும் பாராட்டி சான்றிதழ் மற்றும் கேடயம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பாரதி கிருஷ்ணகுமார், அருள் பிரகாசம் ஆகியோர்கள் வழங்கினார். தொடர்ந்து சிறப்பு விருந்தினர்கள் பாரதி கிருஷ்ணகுமார், அருள் பிரகாசம் ஆகியோர்களை மாவட்ட நிர்வாகம் சார்பாக -மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் சிறப்பு செய்தார்.இதில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தி.சண்முகவள்ளி, உதவி இயக்குனர் நில அளவை ப்பி.நாகராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.