பதிவு:2024-03-07 08:01:53
ரயில் இரும்பு பாதையை கடக்கும் முயன்ற லாரி இரும்புப் பாதையில் சிக்கியதால் சென்னை நோக்கி செல்லக்கூடிய ரயில்கள் தாமதம் :
திருவள்ளூர் மார்ச் 06 : திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு ரயில் நிலையம் அருகில் திருவள்ளூர் ஹை ரோட்டில் இருந்து வேப்பம்பட்டு பகுதிக்கு செல்லக்கூடிய கனரக வாகனம் முதல் இருசக்கர வாகனங்கள் வரை அதிகப்படியாக ரயில்வே கேட்டை கடந்த செல்கின்றன.
இந்நிலையில் இன்று காலை ரயில்வே கேட்டை கடக்க முயன்ற கனரக லாரி ஒன்று தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டதால் அவ் அவ்வழியாகச் செல்லக் கூடிய கருடாத்திரி எக்ஸ்பிரஸ் மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த ரயில்கள் தாமதமாக செல்லக்கூடிய நிலை ஏற்பட்டது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பொது மக்கள் ஒத்துழைப்புடன் கனரக வாகனத்தை அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டு வந்தனர். அரைமணி நேரத்திற்கு பின்னர் தண்டவாளத்தில் சிக்கிய கனரக வாகனம் அப்புறப்படுத்தப்பட்ட நிலையில் சென்னை செல்லக்கூடிய சில ரயில்கள் காலதாமதமாக சென்றதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.