கொழுந்தளூரில் இயற்கை விவசாயம் குறித்து வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

பதிவு:2024-03-07 08:09:38



கொழுந்தளூரில் இயற்கை விவசாயம் குறித்து வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

கொழுந்தளூரில் இயற்கை விவசாயம் குறித்து வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

திருவள்ளூர் மார்ச் 06 : திருவள்ளூர் மாவட்டம், பூண்டி வட்டாரம் கொழுந்தளூரில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 2023-2024 மாவட்ட அளவிலான இயற்கை விவசாயம் குறித்து வர்த்தக கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி. ராஜேந்திரன் முன்னிலையில் துவக்கி வைத்து பேசினார்.

இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் அவசியம் உணவு உட்கொள்கிறோம் என்றால் அதற்கு அறிவியல் முன்னேற்றம் தான் முக்கிய காரணம். அதற்காக வேளாண் இயற்கை முறையினை புறக்கணிப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகும்.

நாம் இயற்கை விவசாயத்தை பாதுகாப்பது தொடர்பான நமது சிந்தனை.எந்த அளவிற்கு வேளாண் துறையில் நாம் அறிவியலில் முன்னேற்றம் அடைந்து இருக்கிறோமோ அதே அளவிற்கு நாம் முன்னோர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்த இயற்கை விவசாயத்தையும் பாதுகாக்க வேண்டும். இப்பொழுது வேளாண் துறையில் உள்ள விவசாயிகள் ஒவ்வொருவரும் இந்த இயற்கை முறையினை கடைபிடிக்க முன்வர வேண்டும் அப்போதுதான் உணவு பாதுகாப்பு நிலையை அடைந்துள்ளோம்.

மேலும் உணவு பாதுகாப்பில் நீடித்த நிலையே அடைய வேண்டும். நம் உணவு உட்கொள்ளும் போது எந்த வித பயமும் இன்றி நாமும் அடுத்த தலைமுறையும் நல்ல உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றால் இயற்கை சார்ந்த விவசாயத்தை முன்னெடுப்பது மிகவும் அவசியமானது. நமது மாவட்டத்தில் எந்த ஒரு விவசாய மக்களும் பாதிக்காத வண்ணம் நிலையினை உருவாக்கியுள்ளோம்.மேலும் அவர்களுக்கான நிவாரணத் தொகையினையும் முழுமையாக வழங்கி உள்ளோம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து விவசாயிகள் இயற்கை விவசாயம் தொடர்பான அமைக்கப்பட்டுள்ள வர்த்தக கண்காட்சி செயல்பாட்டினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்.பின்னர் இயற்கை வேளாண் தொடர்பான பொது கரங்கள் என்ற தலைப்பில் உள்ள கையேட்டினை மாவட்ட ஆட்சியர் வெளியிட திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் விவசாயிகள் பெற்றுக் கொண்டனர்.தொடர்ந்து 15 விவசாயிகளுக்கு ரூ.43,430 மதிப்பீட்டில் வேளாண் உபகரணங்கள் வழங்கினார்.

இதில் இணை இயக்குநர் வேளாண் முருகன், வேளாண்மை அறிவியல் மையம் முனைவர் பானுமதி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) வேதவல்லி துணை இயக்குநர் சுசிலா விவசாய பெருங்குடி மக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.