பதிவு:2024-03-07 08:11:43
பட்டரை பெரும்புதூரில் 1674 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் : கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார் :
திருவள்ளூர் மார்ச் 06 : திருவள்ளூர் மாவட்டம் பட்டரை பெரும்புதூர் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி 1 இலட்சம் விலையில்லா வீட்டுமனை பட்டா வழங்கும் திட்டத்தின் கீழ் 1674 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்களை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் சட்டமன்ற உறுப்பினர்கள் வி.ஜி.ராஜேந்திரன் (திருவள்ளூர்), துரை சந்திரசேகர் (பொன்னேரி) , மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் கே.வி.ஜி.உமாமகேஸ்வரி ஆகியோர்கள் முன்னிலையில் வழங்கி பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் 1 இலட்சம் பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனை பட்டாக்கள் தமிழ்நாடு முழுவதும் வழங்க அறிவுறுத்தினார்கள். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 1674 பயனாளிகளுக்கு இன்றைய தினம் வழங்கப்பட்டு வருகிறது. நான் 7 ஆவது முறையாக பட்டா வழங்கும் விழாவில் கலந்துகொண்டு பட்டாக்கள் வழங்கியுள்ளேன் என்பதை மகிழ்ச்சியாக கருதுகிறேன்
இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 14,000 பட்டாக்கள் பயனாளிகளுக்கு வழங்கியுள்ளோம் மாவட்ட ஆட்சியர் கூறியபடி நமது மாவட்டத்தில் 20,000 விலையில்லா பட்டதாக்கள் பயனாளிகளுக்கு வழங்கப்படும். நீங்கள் கொஞ்சம் சிந்தியுங்கள் இந்த அரசு உங்களைத் தேடி வரும் அரசு, மக்களுக்கு எந்தவித பாதிப்பு இல்லாத அடிப்படை வசதிகளை தீர்வு காணுகின்ற அரசு.. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசுதான் இந்தியாவிற்கே முன்னுதாரமாக திகழ்கிறது. அனைத்து மக்களுக்கும் விடுபடாமல் விலையில்லா பட்டாக்கள் விரைவில் வழங்கப்படும்.
ஆகவே இந்த அரசு மக்களுக்கான அரசு மக்களாட்சி உள்ள அரசு மக்களின் தேவைகளை உடனடியாக நிவர்த்தி செய்யும் அரசு. கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும் பொழுது எப்படி செயல்பட்டரோ அவரை விட ஒரு படி மேலே சென்று மக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார்கள் என மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்தார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார், வருவாய் கோட்டாட்சியர்கள் ஆ.கற்பகம் (திருவள்ளூர்),க.தீபா(திருத்தணி), திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், வட்டாட்சியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.