திருவள்ளூரில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு முதலாம் காலாண்டு கூட்டம் :

பதிவு:2024-03-07 16:07:56

திருவள்ளூரில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு முதலாம் காலாண்டு கூட்டம் :

திருவள்ளூரில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு முதலாம் காலாண்டு கூட்டம் :

திருவள்ளூர் மார்ச் 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவிலான வன்கொடுமை தடுப்பு விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு முதலாம் காலாண்டு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.

இக்கூட்டத்தில் எஸ்.சி., எஸ்.டி.,வன்கொடுமை தடுப்புச்சட்ட பிரிவு வழக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வழங்கும் தீருதவித் தொகை உரிய காலக்கெடுவிற்குள் வழங்குவது தொடர்பாகவும், வன்கொடுமை நிலுவை வழக்குகளை விரைந்து முடிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்வது தொடர்பாகவும், ஆய்வு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரா. ஸ்ரீநிவாச பெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஓ. என் .சுகபுத்ரா, பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வதஸ், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, மற்றும் .அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.சி., எஸ்.டி., பிரிவு, மற்றும் அலுவல் சாரா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.