தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர் :

பதிவு:2024-03-07 16:11:56



தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர் :

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இரவு சமைத்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்தனர் :

திருவள்ளூர் மார்ச் 07 : தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 27 ம் தேதி முதல் காலவரையற்ற வேளை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள 315 வட்டாட்சியர் அலுவலகங்களிலும், 94 வருவாய் அலுவலகங்களிலும், 38 மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பாக 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று 4 ம் தேதி இரவு முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தொடர் காத்திருப்பு போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் வெண்ணிலா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெய்க்கர் பிரபு, மாவட்ட பொருளாளர் முனுசாமி, மாவட்ட துணைத் தலைவர்கள் ஏ.செந்தில்குமார், வசந்தி, செந்தில் முருகன், மாவட்ட இணை செயலாளர்கள் விஜய் ஆனந்த், கஜேந்திரன், யுகேந்தர் மத்திய செயற்குழு உறுப்பினர் பெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலத் துணைத் தலைவர் ஏ.மணிகண்டன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

இவர்கள் இளநிலை வருவாய் ஆய்வாளர், முதுநிலை வருபாய் ஆய்வாளர் பெயர் மாற்ற அரசாணையின் அடிப்படையில் விதித்திருந்த ஆணையினை வெளியிட வேண்டும், பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், அனைத்து நிலை அலுவலர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும், 3 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும் உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முன்திணம் 4 ம் தேதி இரவு தொடர் காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. இந்நிலையில் 5 ம் தேதியான நேற்றும் தொடர்ந்தது. காத்திருப்பு போராட்டம் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்றது. தொடர்ந்து இரவும் அங்கேயே சமைத்து சாப்பிட்டுவிட்டு, கொசுத் தொல்லை காரணமாக தீ மூட்டியபடி அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். மேலும் இரவு முழுவதும் அங்கேயே படுத்து தூங்கி, இன்றும் 3-வது நாளாக போராட்டம் தொடர்கிறது.மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலிலேயே அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு விட்டு தொடர்ந்து இரவும், பகலும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.