திருவள்ளூரில் மாவட்ட அளவிலான நெகிழி தடையை திறம்பட செயல்வடுத்துவதற்கான செயற்குழு கூட்டம் :

பதிவு:2024-03-07 16:21:17



திருவள்ளூரில் மாவட்ட அளவிலான நெகிழி தடையை திறம்பட செயல்வடுத்துவதற்கான செயற்குழு கூட்டம் :

திருவள்ளூரில் மாவட்ட அளவிலான நெகிழி தடையை திறம்பட செயல்வடுத்துவதற்கான செயற்குழு கூட்டம் :

திருவள்ளூர் மார்ச் 07 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட அளவிலான நெகிழி தடையை திறம்பட செயல்வடுத்துவதற்கான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் நெகிழிக் கழிவு மேலாண்மை விதிகள்-2016ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளை செயல்படுத்தவும் மற்றும் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழியின் தடையை திருவள்ளூர் மாவட்டத்தில் திறம்பட செயல்படுத்தவும் மாவட்ட அளவிலான நெகிழி தடையை திறம்பட செயல்வடுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் , உள்ளாட்சி அமைப்புகளுக்கு தடைசெய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டை கடைகள், வணிக வளாகங்கள் மற்றும் சந்தைகளில் தீவிரமாக தொடர்ந்து கண்காணிக்குமாறும், மேலும் ஒருமுறை பயன்படுத்தும் நெகிழி பொருட்கள் மற்றும் நெகிழி கைப்பபைகளுக்கு மாற்றாக மஞ்சப்பை போன்ற பாரம்பரியமான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றுப் பொருட்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்த வேண்டும் என அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் அறிவுறுத்தினார்.

மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர்கள் ப.ரவிச்சந்திரன் (திருவள்ளூர்) மற்றும் பி.எஸ் லிவிங்ஸ்டன் (கும்மிடிப்பூண்டி), மாவட்ட தொழில் மையம் மேலாளர் சேகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் ஜெயக்குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.