திருவள்ளூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் செலுத்தவில்லை என்றால் குடிநீர் , மின்சாரம், பாதாளா சாக்கடை இணைப்புகள் படிப்படியாக துண்டிக்கப்படும் -நகராட்சி ஆணையர் எச்சரிக்கை :

பதிவு:2024-03-08 10:20:21



திருவள்ளூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் செலுத்தவில்லை என்றால் குடிநீர் , மின்சாரம், பாதாளா சாக்கடை இணைப்புகள் படிப்படியாக துண்டிக்கப்படும் -நகராட்சி ஆணையர் எச்சரிக்கை :

திருவள்ளூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் செலுத்தவில்லை என்றால் குடிநீர் , மின்சாரம், பாதாளா சாக்கடை இணைப்புகள் படிப்படியாக துண்டிக்கப்படும் -நகராட்சி ஆணையர் எச்சரிக்கை :

திருவள்ளூர் மார்ச் 08 : திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. இந்த 27 வார்டுகளிலும் மொத்தம் 550-க்கும் மேற்பட்ட தெருக்களில் வீடு, கடைகள், வணிக வளாகங்கள் என 13 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன. இதில் 3 ஆயிரம் கடைகள், தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.

திருவள்ளூர் நகராட்சியில் சொத்து வரி, தொழில் வரி, காலி மனை வரி, குடிநீர் வரி, கடை வாடகை மற்றும் குத்தகை கட்டணம் ஆகியவற்றை வசூல் செய்ய நகராட்சி ஆணையர் உத்தரவின் பேரில் தீவிர வசூல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பொது மக்கள் தாங்கள் செலுத்த வேண்டிய வரியை செலுத்தி இருக்கிறார்களா என நகராட்சி ஆணையர் மற்றும் ஊழியர்கள் அவ்வப்போது ஒவ்வொரு கடைக்கும் நேரில் சென்று உடனடியாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்துவதுடன் நோட்டிஸ் வழங்கியும் எச்சரித்து வருகின்றனர்.

திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர், சொத்து வரி, பாதாள சாக்கடை கட்டணம் தொழில்வரி மற்றும் காலி மனை வரி ஆகியவை மூலம் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 17.05 கோடி ரூபாய் அளவிற்கு நகராட்சி நிதி ஆதாரமாக உள்ளது. நகராட்சியில் வசூலாகும் தொகையில் 50 சதவீதம் நகராட்சி ஊழியர்களின் சம்பளம் மின் கட்டணம் அலுவலகம் வாகன பராமரிப்பு ஆகியவற்றிற்கு செலவாகிறது. மீதமுள்ள தொகை மட்டுமே நகர வளர்ச்சிக்கு செலவிடப்பட்டு வருகிறது.

எனவே, திருவள்ளூர் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் நகராட்சிக்கு தாங்கள் செலுத்த வேண்டிய சொத்துவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை கட்டணம் , ஆகியவைகளை உடனடியாக நகராட்சிக்கு நிலுவையின்றி செலுத்த வேண்டும்.தவறினால் ஜப்தி, குடிநீர் இணைப்பு துண்டிப்பு மற்றும் புதை வடிகால் அடைப்பு போன்ற துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் சுபாஷினி எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் 12 895 பேர் வீட்டு வரி செலுத்தாமல் நிலுவையில் உள்ளனர். அதே போல் குடி நீர் வரி செலுத்த வேண்டியவர்கள் 9600 பேரும், பாதாள சாக்கடை வரி 9612 பேரும் செலுத்த வேண்டியுள்ளது. இந்த வரி வசூல் நடவடிக்கையில் நகராட்சி ஆணையர் சுபாஷினி அறிவுறுத்தலின் பேரில் மேலாளர், பொறியாளர், இளநிலை பொறியாளர், வருவாய் ஆய்வாளர் , வருவாய் அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர், நகராட்சி பணியாளர்கள் அனைவரும் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை உடனடியாக செலுத்த வேண்டும். செலுத்தாத பட்சத்தில் முதல் கட்டமாக குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும், இரண்டாவதாக பாதாள சாக்கடை இணைப்புதுண்டிப்பு நடவடிக்கையும், அடுத்த கட்டமாக வரி செலுத்தாதவர்கள் விவரங்களை மின்வாரியத்திற்கு அனுப்பி மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். நகராட்சி சட்டப்படியும் நகர்மன்ற தீர்மானம் படியும் ஜப்தி நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட இருப்பதால், இதனை தவிர்க்க கட்டாயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினை உடனடியாக செலுத்த வேண்டும் என நகாரட்சி ஆணையர் சுபாஷினி எச்சரித்துள்ளார்.

வரும் 31-ம் தேதிக்குள் வரியினை செலுத்த ஏதுவாக வேலை நாட்கள் மட்டுமல்லாது விடுமுறை நாட்களிலும் காலை 8.30 மணி மணிமுதல் இரவு 7 மணி வரை வசூல் மையத்தில் வசூல் செய்யும் பணி நடைபெறும் என்றும் ஆணையர் சுபாஷின் தெரிவித்துள்ளார்.