பதிவு:2024-03-08 10:24:22
போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கனரக வாகனங்கள் எளிதில் செல்லவும் ஏதுவாக ரூ.1.75 கோடி மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்க பூமி பூஜை : பூந்தமல்லி எம்எல்ஏ பணிகளை தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 08 : போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் திருவள்ளூர் நகரை இணைக்கும் பகுதிக்கு முன்னர் ஈக்காடு பகுதியில் இருந்து வள்ளுவர்புரம் பகுதியில் இருந்து நீதிபதி செல்வகுமார் பிரதான சாலை வரை கிட்டத்தட்ட ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்க பொது மக்கள் பூந்தமல்லி எம்எல்ஏ. ஆ.கிருஷ்ணசாமிக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
திருவள்ளூர் அடுத்த வெள்ளியூர், தாமரைப்பாக்கம் வெள்ளியூர் கும்மிடிப்பூண்டி உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து கனரக வாகனங்கள், வேன், கார், ஆட்டோ போன்ற வாகனங்கள் திருவள்ளூர் நகர் வழியாக பூந்தமல்லி, சென்னை, ஸ்ரீபெரும்புதூர், காஞ்சிபுரம், திருத்தணி, திருப்பதி ஆகிய பகுதிகளுக்கு செல்லும். திருவள்ளூர் நகரில் அரசு உதவி பெறும் பள்ளிகள், மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இருப்பதால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் நகரின் முக்கிய சாலையில் தான் செல்ல வேண்டும். மேலும் நகரின் முக்கிய சாலைகள் குறுகலாக இருப்பதால் கனரக வாகனங்கள் வரும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.
இதனையடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்று புதிய சாலை விரிவாக்கம் திட்டத்தின் கீழ் காக்களூர் நீதிபதி செல்வகுமார் பிரதான சாலையிலிருந்து ஈக்காடு வரை ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
திருவள்ளூர் ஒன்றிய செயலாளர் ஆர்.ஜெயசீலன் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலரும் தலைமை பொதுக்குழு உறுப்பினருமான த.எத்திராஜ் முன்னிலை வகித்தார். இதில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ரூ.1.75 கோடிக்கு தார் சாலை அமைப்பாதற்கான பூமி பூஜையில் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.,
இதில் ஓய்வுபெற்ற நீதிபதி செல்வகுமார், நிர்வாகிகள் சௌந்தர்ராஜன், சண்முகம், முருகுன், ஜெய்சங்கர், செந்தில், எட்டியப்பன், சராஜி, சரவணன், சிவபிரகாஷ், சதீஷ் வேலு ,மனோ கார்த்தி, மதன்,சேதுபதி, கிருஷ்ணன், மற்றும் எம்பையர் சிட்டி சங்க நர்வாகிகள் பெருமாள் செல்வும் உள்பட பலர் கலந்து கொண்டனர்.