பதிவு:2024-03-12 05:24:50
திருத்தணி அருகே கஞ்சா செடி வளர்த்த 62 வயது முதியவர் கைது : மதுவிலக்குப் பிரிவு போலீசார் அதிரடி :
திருவள்ளூர் மார்ச் 11 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த திருவாலங்காடு ஒன்றியம், கொடிவெள்ளி கிராமத்தில் முதியவர் ஒருவர் வீட்டில் கஞ்சா செடி வளர்ப்பதாக திருத்தணி டிஎஸ்பி விக்னேஷுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதனையடுத்து டிஎஸ்பி உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி மற்றும் போலீசார் கொடிவெள்ளி கிராமத்தில் வசிக்கும் நடராஜன் (62) என்பவர் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நடராஜன் வீட்டிற்கு பின்பக்கத்தில் 4 அடி உயரமுள்ள கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்தது. வீட்டில் வளர்த்த கஞ்சா செடியை பறிமுதல் செய்த போலீசார் நடராஜனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர். வீட்டில் கஞ்சா செடி வளர்த்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.