பதிவு:2024-03-22 17:50:58
திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் மார்ச் 22 : திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக சார்பில் இந்தியா கூட்டணி கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் மாவட்ட தலைவர்கள் ஆலோசனை கூட்டம் திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ் சந்திரன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். திருவள்ளூர் எம்எல்ஏ வி.ஜி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.
:
இதில் நிர்வாகிகள் திமுக கே.திராவிட பக்தன், திருத்தணி பூபதி, ஆர்டிஇ ஆதிசேஷன், உதயமலர் பாண்டியன்,விசிஆர் குமரன், மோதிலால், மோ.ரமேஷ், மகாலிங்கம் அரிகிருஷ்ணன், கூளூர் ராஜேந்திரன், ஆர்த்தி ரவி, கிருஷ்ணன், பி டி.சந்திரன் சண்முகம், பழனி, ஜோதி, பொன் பாண்டியன்,மிதுன் சக்கரவர்த்தி, வினோத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
:
அதே போல் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த மதிமுக பாபு,விசிக தளபதி சுந்தர்,கம்யூனிஸ்ட் ராஜேந்திரன்,கோபால்,காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தளபதி மூர்த்தி, ரகுராமன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திருவள்ளூர் மேற்கு மாவட்ட பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் திருவள்ளூர் நகர செயலாளர் சி.சு. ரவிச்சந்திரன் நன்றி தெரிவித்தார்.
:
இந்த கூட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி எஸ் சந்திரன் எம்எல்ஏ பேசினார். அப்போது, திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் உள்ள திருவள்ளூர் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
:
அதேபோல் அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட திருத்தணியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜெகத்ரட்சகனை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.இந்த தேர்தலில் எந்த ஒன்றியத்தில், எந்த நகரத்திலாவது வாக்கு குறைகிறதோ அந்த பகுதி நிர்வாகி மீது திமுக தலைமை பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.