பதிவு:2024-03-22 17:56:20
திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நகராட்சி சார்பில் எனது வாக்கு எனது உரிமை கையெழுத்து இயக்கம் : நகராட்சி ஆணையர் தொடங்கி வைத்தார் :
திருவள்ளூர் மார்ச் 22 : 2024 நாடாளுமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.இந்நிலையில் வாக்கு சதவிகிதத்தை அதிகரிக்கவும்,, 100 சதவிகித வாக்கை பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
:
அதன்படி இந்திய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின்படி மாவட்ட கலெக்டரும் தேர்தல் அலுவலருமான தா பிரபு சங்கர் பரிந்துரையின் பெயரில் திருவள்ளூர் நகராட்சி சார்பில் எனது வாக்கு எனது உரிமை கையெழுத்து இயக்கம் நிகழ்ச்சி திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது.
:
இந்த நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் சுபாஷினி தலைமை தாங்கினார். சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், வருவாய் அலுவலர் கருமாரியம்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டு ரயில் நிலையத்திற்கு செல்பவர்கள் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து இறங்கி வெளியே வருபவர்கள் என அனைவரையும் இந்த கையெழுத்துஇயக்கத்திற்கான பேனரில் கையெழுத்திட்டு போக வலியுறுத்தினர்.
:
18 வயது நிரம்பிய புதிய வாக்காளர்களும் 85 வயதிற்கு மேலாகியும் வாக்களிக்க கூடிய அனைவரும் கட்டாயம் வாக்களித்து தங்கள் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் கல்லூரி மாணவ மாணவிகள், சட்டக் கல்லூரி மாணவ மாணவிகள், பொதுமக்கள், பெண்கள், வியாபாரிகள், காவல்துறையினர், முதியவர்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் கையெழுத்திட்டு சென்றனர்.இதேபோல் நகராட்சி சார்பில் அடுத்த மூன்று நாட்கள் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெறும் என நகராட்சி ஆணையர் சுபாஷினி தெரிவித்தார்.