பதிவு:2022-05-17 12:17:41
நேமலூரில் பொதுமக்களுக்கு வழங்கிய 224.8 ஏக்கர் பஞ்சமி நிலங்களை திமுக பிரமுகர் தனி நபர்களுக்கு விற்பனை செய்வதை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் மே 17 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி தொகுதி நேமலூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் உள்ள 224.8 ஏக்கர் பஞ்சமி விவசாய நிலங்களை அதே பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தற்போது அந்த பஞ்சமி நிலங்களை திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மனோகரன் என்ற திமுக பிரமுகர் அரசு அதிகாரிகள் துணையுடன் தனிநபர்களுக்கு விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. இதை பொது மக்கள் கேட்டால் குண்டர்களை வைத்து மிரட்டி வருவதாகவும், இது குறித்து அரசு அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து கிராம மக்களுடன் இணைந்து தேசிய சட்ட உரிமை மக்கள் பாதுகாப்பு கவுன்சில் அமைப்பினர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தேசிய செயலாளர் சுமலதா, கவுன்சில் நிறுவனர் ஏ.ரபீக் ஆகியோர் தலைமையில் பொது மக்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக பிரமுகரான மனோகரன் தங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டுவதாகவும், அதிகாரிகளும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டியதோடு, பொது மக்களோ அல்லது அமைப்பைச் சேர்ந்தவர்களோ சென்று கேட்கும் போது குண்டர்களை வைத்து மிரட்டி வருவதாகவும், விவரம் தெரியாமல் தற்போது 100-க்கும் மேற்பட்டோர் நிலத்தை வாங்கி அதில் வீடுகட்டி குடியேறியிருப்பதால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அரசு பஞ்சமி நிலங்களை மீண்டும் மீட்டு பொது மக்களிடம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.