திருவள்ளூர் மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்வதற்கான முதலாம் சீரற்றமயமாக்கல் பணி : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார் :

பதிவு:2024-03-22 18:04:46

திருவள்ளூர் மார்ச் 22 : பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 முன்னிட்டு இந்தியில் தேர்தல் ஆணையத்தால் 16 3 2024 அன்று அறிவிக்கப்பட்டு 19.04.2024 அன்று திருவள்ளூர் தொகுதிக்கான தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது. :

இதனைத் தொடர்ந்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலருக்கான முதலாம் கட்ட பயிற்சி வகுப்பு வருகின்ற 24.03.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று நடைபெற உள்ளதால் வாக்குப்பதிவு அலுவலர்கள் 10 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒதுக்கீடு செய்வதற்கான முதலாம் சீரற்றமயமாக்கல் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார். :

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.இராஜ்குமார், மாவட்ட நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், உதவி ஆணையர் கலால் ராங்கராஜன், தேர்தல் வட்டாட்சியர் சோமசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.