நேர்மையான முறையில் வாக்களிப்பது குறித்த விழிப்புணர்வு : சிறந்த மீம்ஸ் , குறும்படம், சுவரொட்டி , கவிதை மற்றும் ஓவியத்திற்கு பரிசு : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு :

பதிவு:2024-03-25 11:00:46

திருவள்ளூர் மார்ச் 23 : இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல் - 2024, 16.03.2024 அன்று அறிவிக்கப்பட்டு எதிர்வரும் 19.04.2024 அன்று திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதிக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது.

இதில் அனைத்து வாக்காளர்களும் நேர்மையான முறையில் வாக்களிக்கும் பொருட்டு, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மீம்ஸ் உருவாக்கம்,குறும்படம்,சுவரொட்டி உருவாக்கம்,கவிதை மற்றும் ஓவியம் ஆகியவற்றை உருவாக்கம் செய்து கீழே குறிப்பிட்டுள்ள இணையதள QR Code-y-ல் பதிவேற்றம் செய்யலாம்.

இதில் சிறந்த பதிவேற்றங்கள் தேர்வு செய்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.