பதிவு:2024-03-25 11:07:17
திருவள்ளூர் தனி தொகுதியில் தேமுதிக பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு :
திருவள்ளூர் மார்ச் 23 : நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.அதன்படி திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளரும் அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளரும் பாஜக வேட்பாளரும் களத்தில் போட்டியிட உள்ளனர்.
இதில் அதிமுக கூட்டணியில் முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி என்பவரை தேமுதிக வேட்பாளராக அறிவித்தது. இவர் கடந்த 2011 முதல் 2016 வரை எழும்பூர் சட்டமன்ற தொகுதி தேமுதிக எம்எல்ஏவாக இருந்துள்ளார். இவர் தற்போது தேமுதிக மாநில இளைஞரணி செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இதனை அடுத்து திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
அதேபோல் பாஜக சார்பில் மாநில பொதுச் செயலாளரான பரமக்குடி காவனூர் பகுதியை சேர்ந்த பாலகணபதி என்பவர் பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவரது மனைவி மீனாட்சி திருவள்ளூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார். தனியார் கேஸ் சிலிண்டர் ஏஜென்சி நடத்தி வரும் இவருக்கு எம்பிபிஎஸ் படிக்கும் ஒரு மகளும், பள்ளியில் படிக்கும் ஒரு மகனும் உள்ளனர். இவர் பாஜக சார்பில் போட்டியிடுகிறார்.