திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களுக்கான ஆய்வுக்கூட்டம் :

பதிவு:2024-03-25 11:09:05



திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களுக்கான ஆய்வுக்கூட்டம் :

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களுக்கான ஆய்வுக்கூட்டம் :

திருவள்ளூர் மார்ச் 23 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களவைத் தொகுதி-2024 முன்னிட்டு திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளின் மத்திய செலவீன பார்வையாளர் லோகேஷ் தாமூர், பூந்தமல்லி ஆவடி மாதவரம் ஆகிய தொகுதிகளின் மத்திய செலவீன பார்வையாளர் சஞ்சய் பகத், மதுரவயல், அம்பத்தூர் ஆகிய தொகுதிகளின் மத்திய செலவின பார்வையாளர் சந்தோஷ் சரண் ஆகியோர் தலைமையில் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் நடைபெற உள்ள திருவள்ளூர் பாராளுமன்றத் தேர்தல் - 2024 ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையத்தால் தேர்தல் செலவின பார்வையாளர்கள் மற்றும் ண ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற செலவின பார்வையாளர் நியமிக்கப்பட்டு அவர்கள் ஆகியோர்கள் தலைமையில் இன்றைய தினம் பறக்கும்படை , நிலையான கண்காணிப்பு குழு , வீடியோ கண்காணிப்பு குழு ஆகிய குழுக்களுடன் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர்களின் பணிகள், செயல்பாடுகள் குறித்தும், மேலும் தொய்வின்றி பாராளுமன்றத் தேர்தல் சிறப்பாக நடத்திட கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது

பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் தொடர்பான மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகளை பார்வையிட்டு செயல்பாடுகள் குறித்து மத்திய தேர்தல் செலவின பார்வையாளர்கள் கேட்டறிந்தார்.

இந்நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஒ.என்.சுகபுத்ரா, உதவி பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வதஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தேர்தல் சத்ய பிரசாத், உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், தனித் துணை ஆட்சியர் (நிலம்) செல்வமதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.