மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி வகுப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2024-03-27 08:17:50



மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி வகுப்பு : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி வகுப்பு :  மாவட்ட தேர்தல்  அலுவலர் த.பிரபு சங்கர் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் மார்ச் 26 : திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி, கவரப்பேட்டை உயர்நிலைப் பள்ளி, பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கர் மக்களவைத் தேர்தல் -2024 முன்னிட்டு 10 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான நடைபெற்று வரும் பயிற்சி வகுப்பினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் இன்று திருவள்ளூர் பாராளுமன்ற தேர்தலுக்கு உட்பட்ட அனைத்து சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 10 இடங்களில் தேர்தல் நடத்துபவர்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை 16,224 பேர் தேர்தல் பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் திருவள்ளூர் மாவட்டத்தை பொருத்தவரை கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி ஆவடி, மதுரவாயல், அம்பத்தூர், மாதவரம், திருவொற்றியூர் ஆகிய 10 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கான பயிற்சியினை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்கள் தலைமையில் வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது .

தற்பொழுது கும்மிடிப்பூண்டி கவரப்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்குச்சாவடி நிறைய அலுவலருக்கான பயிற்சி 55 அறையில் 2204 நபர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது . தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி ஒரு பயிற்சி வகுப்பில் 40 நபர் என்ற அளவில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம். ஒவ்வொரு அறைக்கும் ஒரு பயிற்றுநர் என்ற அடிப்படையில் 55 பயிற்றுநர்கள் கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம்.

இதே போல் பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2183 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு 55 அறைகளில் பயிற்சி அளித்து வருகிறோம். மேலும், திருவள்ளுர் மாவட்டத்தில். உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலருக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்று வருகிறது இந்த பயிற்சியை பொருத்தவரை வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு அவர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம். மேலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை எவ்வாறு கையாள வேண்டும் நமது மாவட்டத்தில் தான் ஒரு காணொளி விளக்கப்படம் மூலம் பயிற்சி அளித்து வருகிறோம்.

மேலும், மாதிரி வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் வாக்குச்சாவடியில் செயல்பாடுகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறோம் . மேலும், அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் 95 சதவீதம் பயிற்சி நிலையை அடைந்துள்ளார்கள். மேலும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிக்கான குடிநீர், கழிப்பறை வசதி, உணவு போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது ஆவலுடன் பயிற்சி ஈடுபட்டு வரும் வாக்குச்சாவடி நிலையாளர்கள் பயிற்சியால் மாண்புமிகு தேர்தல் ஆணையம் அளித்துள்ள விதிமுறைகள் படி நேர்மையான முறையில் சரியான முறையில் நடத்திக் காட்டுவார்கள். என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பலவந்த், தனித் துணை ஆட்சியர் (சபாதி) கணேசன் , வட்டாட்சியர்கள் கும்மிடிப்பூண்டி ப்ரீத்தி, பொன்னேரி மதிவாணன், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.