மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சி சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த பிரம்மாண்ட பலூன் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் பறக்க விட்டார் :

பதிவு:2024-03-27 08:23:38

திருவள்ளூர் மார்ச் 26 : திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு திருவள்ளூர் நகராட்சி சார்பில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பலூனை பறக்க விட்டார்.

மக்களவைப் பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் நகராட்சி அலுவலகத்தில் பிரம்மாண்டமான பலூனை , எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 % சதவீதம் வாக்குப்பதிவு , தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற முழக்கமிட்டு பறக்க விட்டார்கள் .

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.இராஜ்குமார், நகராட்சி ஆணையர் சுபாஷினி, திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன். மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.