பதிவு:2024-03-28 17:55:56
திருவள்ளூர் தனி தொகுதியில் வேட்புமனு தாக்கலின் போது உறுதி மொழியை வாசிக்க தடுமாறிய நாம் தமிழர் கட்சி வேட்பாளர் :
திருவள்ளூர் மார்ச் 27 : தமிழகத்தில் ஏப்ரல் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கடந்த 20-ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது.இதனை தொடர்ந்து திருவள்ளூர் தனி தொகுதியில் முதலாவதாக நேற்று தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி தனது வேட்பு மனுவை முன்னாள் அமைச்சர்கள் புடைசூழ வேட்புமனு தாக்கல் செய்ய அவரை தொடர்ந்து பாஜக வேட்பாளர் பொன் வி. பாலகணபதி, பகுஜன் சமாஜ் கட்சி டி.தமிழ்மதி மற்றும் சுயேட்சை வேட்பாளர் என 4 பேர் தனது விருப்பமானவை தாக்கல் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து இன்று நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர் தனது கட்சி நிர்வாகிகளுடன் பாரதியார், ராஜராஜ சோழன், டாக்டர் அம்பேத்கர் ஆகியோர் வேடம் அணிந்து ஊர்வலமாக வந்து தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலரும் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கரிடம் தாக்கல் செய்தார்.