பதிவு:2024-03-28 17:57:32
திருவள்ளூர் ஆர் எம் ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையம் : மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் மார்ச் 27 : திருவள்ளூர் ஆர் எம் ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் நடைபெற்று வரும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு முதல் நாள் மொழிப்பாட தேர்வில் 33814 மாணவர்களில் 33302 மாணவர்கள் 138 தேர்வு மையங்களில் தேர்வு எழுதினர். 478 மாணவர்கள் தேர்வில் பங்குபெறவில்லை
இவர்களில் 540 மாணவர்கள் சொல்வதை எழுதுபவர் மூலம் மொழிப்பாட தேர்வினை எழுதினர்.தேர்வினை கண்காணிக்கும் வகையில் 52 பறக்கும் படை கண்காணிப்பாளர்களும் ஒரு மையத்திற்க்கு ஒரு நிலையான கண்காணிப்பாளர்களும் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் தெரிவித்தார்.இப்பொதுத் தேர்வுகளுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் 13 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களிலிருந்து 37 வழித்தட அலுவலர்கள் ஆயுதம் தாங்கிய காவலர் உதவியுடன் வாகனம் மூலம் அனைத்து தேர்வு மையங்களுக்கு வினாத்தாள் பாதுகாப்பாக ஒப்படைக்கப்படவுள்ளது.
இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன், மாவட்ட உதவி அலுவலர் பாலமுருகன் மற்றும் ஆசிரியர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.