பதிவு:2024-03-28 18:06:29
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர் நேரில் ஆய்வு :
திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் தனி நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்.19-ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெறுவதையொட்டி வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு 23 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பான பணிகளில் மாவட்ட நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
திருவள்ளூர் அருகே பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைப்பதற்கான பாதுகாப்பு வசதிகள் தொடர்பாக ஆட்சியர் த.பிரபுசங்கர் தேர்தல் பிரிவு அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதேபோல், இந்த மையத்தில் திருவள்ளூர் தனி நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள திருவள்ளூர், திருத்தணி, கும்மிடிப்பூண்டி,பொன்னேரி, பூந்தமல்லி ஆவடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கும் அறையைப் பார்வையிட்டார். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வரிசைப்படி வைக்க இருக்கும் பகுதியில், போதுமான பாதுகாப்புகள் உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்தார்.தொடர்ந்து பதற்றம் நிறைந்த வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய அடிப்படை வசதிகள் தொடர்பாகவும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்