பதிவு:2024-03-28 18:08:05
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு செயல்முறைப் படுத்தப்பட்ட தேர்தல் திட்டப்பணிகள் குறித்து திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி (தனி) பொது பார்வையாளர் அபு இம்ரான் ஆய்வு :
திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி (தனி) பொது பார்வையாளர் அபு இம்ரான் மக்களவைத் தேர்தல்-2024 முன்னிட்டு செயல்முறைப் படுத்தப்பட்ட தேர்தல் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர்,ஆவடி காவல் ஆணையர் கி. சங்கர் ஆகியோர் தலைமையில், ஆவடி துணை ஆணையர் ஐமன் ஜமால், கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள் ரெட்டில்ஸ் துணை காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியின் மொத்த வாக்காளர் எண்ணிக்கை குறித்தும், மக்களவைத் தேர்தல் நடத்தை விதி அமல்படுத்தியது உடன் பொது இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சுவர் விளம்பரங்கள் பதாகைகள், பிளக்ஸ் பேனர்கள் அகற்றுவதற்கு மேற்கொண்டுள்ள பணிகள் குறித்தும் , பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு ஆகியோர்களின் பணிகள் குறித்தும், மாவட்டத்தில் உள்ள மொத்த காவல் நிலையங்கள் எண்ணிக்கை குறித்தும், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழுக்களால் போதுமான ஆதாரமின்றி கொண்டு செல்லப்பட்ட பொருட்களை கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும், கைப்பற்றப்பட்ட பொருட்களை விடுவித்தல் குறித்தும், பதட்டமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை குறித்தும், கட்டுப்பாட்டு மையங்களின் மேற்கொள்ளப்பட்டு வரும் தேர்தல் செயல்பாடுகள் குறித்தும், மக்களவைத் தேர்தல் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து மேற்கொண்டுள்ள பல்வேறு விழிப்புணர்வு செயல்பாடுகள் குறித்தும், போன்ற பல்வேறு தேர்தல் பணிகள் குறித்து திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி (தனி) பொது பார்வையாளர் அபு இம்ரான் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ,இராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி ஓ.என். சுகபுத்ரா, ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான், பொன்னேரி சார் ஆட்சியர் வாகே சங்கத் பல்வந்த் மற்றும் உயர் அலுவலர் கலந்து கொண்டனர்.