திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள மின்பொருள் சோதனைக் கூடம் அருகே குப்பை கொட்டி எரிப்பதால் பெரும் தீவிபத்து ஏற்படும் அபாயம் : குப்பையை எரிக்க தடை விதிக்க ஊழியர்கள் கோரிக்கை :

பதிவு:2024-03-29 16:55:13

திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் அடுத்த காக்களூர் பகுதியில் இயங்கி வருகிறது மத்திய மின்பொருள் சோதனைக் கூடம். இங்கிருந்து தமிழக அரசு சார்பில் இலவசமாக வழங்கப்படும் மின்சாதன பொருட்கள் தரம் குறித்து ஆய்வு செய்த பின் தான் பயன்பாட்டிற்கு வழங்கப்படும். இந்த கிடங்களில் ரூ.25 கோடி மதிப்புள்ள எளிதில் தீப்பிடித்து வெடிக்க கூடிய இயந்திரங்கள் உள்ளன. இப்பகுதியில் தீ விபத்து ஏற்பட்டால் இரண்டு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் என மின்பொருள் சோதனைக் கூட ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கிடங்கு அருகே காக்களூர் மற்றும் திருவள்ளூர் பகுதிகளில் சேகரமாகும் குப்பையை கொட்டி வருகின்றனர். இந்த குப்பையிலிருந்து அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது. இப்பகுதியில் குப்பை கொட்டுவது குறித்து மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு பலமுறை மின்பொருள் சோதனைக் கூட அலுவலர்கள் புகார் அளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இப்பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் இங்கிருந்த 110 கிலோவாட் மின்மாற்றி சேதமடைந்தது .தகவலறிந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அப்பகுதியில் குப்பையிலிருந்து புகை வந்து கொண்டே இருப்பதால் மின்பொருள் சோதனை கூடத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கடும் அச்சத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் மின்பொருள் சோதனைக் கூடம் அருகே குப்பை கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது.