பதிவு:2024-03-29 17:03:05
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளர்களின் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டது :
திருவள்ளூர் மார்ச் 29 : நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் தாக்கல் நேற்றுடன் நிறைவு பெற்றது. அதன்படி திருவள்ளூர் தனி தொகுதியில் கடந்த 20 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை மொத்தம் 31 வேட்புமனுக்கல் தாக்கல் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அதிமுக கூட்டணி தேமுதிக வேட்பாளர் நல்லதம்பி, திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில், பாஜக வேட்பாளர் பொன். வி. பாலகணபதி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெகதீஷ் சந்தர், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் டி தமிழ் மதி மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில் ஒரு வேட்பாளருடன் குறைந்தது மூன்று பேர் பங்கேற்க வேண்டும் என்ற அறிவுறுத்தலின் பேரில் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து வேட்புமனுக்கள் பரிசீலனை தொடர்ந்து நடைபெற்றது.