பதிவு:2024-03-29 17:05:25
பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் மக்களவை தேர்தலை முன்னிட்டு பொதுமக்களுக்கு 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த மனித சங்கிலி இயக்கம் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் கலந்து கொண்டார் :
திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் மாவட்டம், பூவிருந்தவல்லி நகராட்சிக்கு உட்பட்ட திருமழிசை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு பூவிருந்தவல்லி நகராட்சி சார்பில் 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற மனித சங்கிலி இயக்கத்தில் கலந்து கொண்டு பார்வையிட்டார். இந்த மனித சங்கிலி இயக்கத்தில் மாணவ மாணவிகள் எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 % சதவீதம் வாக்குப்பதிவு , தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகள் கொண்டு முழக்கமிட்டனர். முன்னதாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாங்கள் எந்த ஒரு ஜாதி. மதம், இன வகுப்புகள் , மற்றும் மொழி பாகுபாட்டிற்கும் ஆட்படாமல் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்களிப்போம் என்று உறுதியளிக்கிறேன். என்ற கையெழுத்து இயக்கத்தினை மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்.பின்னர் எதிர்வரும் மக்களவை பொதுத் தேர்தலில் வாக்காளர் உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் ஏற்றுக் கொள்ள அனைவரும் எடுத்துக் கொண்டார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், திருவள்ளூர் வருவாய் கோட்டாட்சியர் கற்பகம், பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் லதா, வட்டாட்சியர் கோவிந்தராஜன். மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.