பதிவு:2024-03-29 17:07:30
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் தேர்தல் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் ஆய்வு :
திருவள்ளூர் மார்ச் 29 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் தலைமையில் மக்களவைத் தொகுதி-2024 முன்னிட்டு திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பூந்தமல்லி ஆவடி மாதவரம் ஆகிய தொகுதிகளின் மத்திய பொது பார்வையாளர் அபு இம்ரான் தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை பார்வையிட்டு அதன் செயல்பாடுகளை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையத்தில் தொலைக்காட்சியில் வரும் ஊடகங்களில் அரசியல் கட்சி சார்ந்த விளம்பரங்களை கண்காணித்து பதிவேடுகளில் பதிவிட்டு வருகிறது. CVigil ல் தேர்தல் தொடர்பான புகார்களை உடனடியாக புகார் அளிப்பவர்களுக்கு உரிய பதில் அளிக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழு வாகனங்கள் ஒரே இடத்தில் அதிக நேரம் நிற்பதே தவிர்க்கும் வகையில் அவர்களது வாகனங்களில் அசைவுகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் தொலைபேசி வாயிலாக தேர்தல் கட்டுப்பாட்டு மையத்திற்கு தேர்தல் தொடர்பான வரும் எவ்வித புகார்கள் ஆனாலும் உடனடியாக அவர்களுக்கு தகுந்த முறையில் பதில் தரப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. என திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி பூந்தமல்லி ஆவடி மாதவரம் ஆகிய தொகுதிகளின் மத்திய பொது பார்வையாளர் அபு இம்ரானுக்கு மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபுசங்கர் தேர்தல் திட்ட பணிகள் குறித்து எடுத்துரைத்தார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் EN – CORE இணையதளத்தில் வேட்பாளர் மனு தாக்கல் செய்த வேட்பு மனுவினை பதிவு செய்யப்பட்ட விவரத்தினை பார்வையிட்டார். இந்நிகழ்வில் உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், தனித் துணை ஆட்சியர் (நிலம்) செல்வமதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.