ஏகாட்டூரில் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரத்திற்காக சென்றவரின் கார் பூட்டிய ரயில்வே கேட்டுக்குள் சிக்கியதால் பரபரப்பு :

பதிவு:2024-04-01 23:12:30



ஏகாட்டூரில் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரத்திற்காக சென்றவரின் கார் பூட்டிய ரயில்வே கேட்டுக்குள் சிக்கியதால் பரபரப்பு :

ஏகாட்டூரில் காங்கிரஸ் சார்பில் பிரச்சாரத்திற்காக சென்றவரின் கார் பூட்டிய ரயில்வே கேட்டுக்குள் சிக்கியதால் பரபரப்பு :

திருவள்ளூர் ஏப் 01 : நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் திருவள்ளூர் தனி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் திருவள்ளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெங்கத்தூரில் பிரச்சாரத்தை தொடங்கி கீழ் நல்லாத்தூர், அதிகத்தூர், மேல்நல்லாத்தூர், ஏகாட்டூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பத்துக்கும் மேற்பட்ட கார்கள் வரிசையாக பின் தொடர பிரச்சார வாகனத்தில் சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்த நிலையில் அதிகத்தூரில் இருந்து ஏகாட்டூர் செல்லும்போது திருவள்ளூர் அரக்கோணம் மார்க்கத்தில் உள்ள தண்டவாளத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.இந்நிலையில் வேட்பாளரின் பிரச்சார வாகனம் கடக்கும்போது ரயில்வே கேட் மூடுவதற்கான அலாரம் அடித்தது. அதற்குள் வேட்பாளரின் பிரச்சார வாகனமும், அந்த வாகனத்தை தொடர்ந்து இரண்டு கார்களும் தண்டவாளத்தை கடந்து விட்டன.

ஆனால் மூன்றாவது கார் கடக்கும்போது கேட் கீப்பர் உடனடியாக கேட்டை மூடிவிட்டார். இதனால் ஒரு கார் இரு தண்டவாளங்களுக்கு இடையே நிறுத்தப்பட்டதால் மற்ற கார்கள் உடனடியாக பின்னோக்கிச் சென்றதால் தண்டவாளத்தில் சிக்க வில்லை.இரு தண்டவாளங்களுக்கு இடையே கார் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ஒருபுறம் சரக்கு ரயிலும் மற்றொரு புறத்தில் புறநகர் மின்சார ரயிலும் கடந்து சென்றது. அதன் பின்னர் கேட் திறக்கப்பட்டவுடன் நடுவில் நின்ற கார் பாதுகாப்பாக வெளியே சென்றது.இச்சம்பத்தால் காங்கிரஸ் வேட்பாளருடன் பிரச்சாரத்திற்கு வருகை தந்த அனைவரிடமும் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.