பதிவு:2024-04-01 23:14:04
திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் பிரச்சாரத்தின் போது ஆம்புலன்ஸ் சிக்கியது :
திருவள்ளூர் ஏப் 01 : திருவள்ளூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் மணவாளநகரில் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று வாக்கு சேகரித்தார்.தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறி வாகனங்களில் கட்சி கொடியுடன் பேரணியாக சென்றனர்.மேலும் சாலையில் கட்டியுள்ள கொடிகளை அகற்ற தேர்தல் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தும் கண்டு கொள்ளாமல் பிரச்சாரத்தை தொடர்ந்தனர்.
மேலும் வாகனங்கள் அதிகளவில் சென்றதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இந்த நிலையில் பூந்தமல்லியில் இருந்து மணவாள நகர் வழியாக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு வந்து கொண்டிருந்த அவசர ஆம்புலன்ஸ் போக்குவரத்து நெரிசலில் சிக்கி செல்ல முடியாமல் சிரமப்பட்டது. இது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே வேட்புமனு தாக்கலின் போது ஆறு பேராக சென்றதால் தேர்தல் நடத்தை விதி மீறியது அம்பலமானது. தொடர்ந்து இன்று தேர்தல் பிரச்சாரத்தின் போது போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி வாகனங்களில் கட்சி கொடிகள் கட்டியும் பிரச்சாரம் செல்லும் இடமெல்லாம் சாலைகளில் கட்சி கொடிகளை கட்டியும் தொடர்ந்து விதிமீறல் ஈடுபட்டு வரும் காங்கிரஸ் வேட்பாளர் ஒரு முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.எனவே தேர்தல் ஆணையம் காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.