பதிவு:2024-04-01 23:20:30
திருவள்ளூரில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் தொடர்பாக பின்பற்ற வேண்டிய அறிவுரைகள், நடைமுறைகள் குறித்து கருத்துரை :
திருவள்ளூர் ஏப் 01 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்களவை தேர்தல்-2024 முன்னிட்டு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர்.தேர்தல் செலவினங்கள் கண்காணிப்பு மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தல் செலவினம் தொடர்பாக பின்பற்ற வேண்டிய அறிவுரைகள், நடைமுறைகள் குறித்து திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதி (தனி) பொது பார்வையாளர் அபு இம்ரான், திருவள்ளூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஆகிய தொகுதிகளின் மத்திய செலவின பார்வையாளர் லோகேஷ் தாமூர், பூந்தமல்லி ஆவடி மாதவரம் ஆகிய தொகுதிகளின் மத்திய செலவின பார்வையாளர் சஞ்சய் பகத் ஆகியோர் முன்னிலையில் கருத்துரை வழங்கினார்கள்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் சத்யா பிரசாத் (தேர்தல்), சித்ரா (கணக்கு) ,வேட்பாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.