பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் :

பதிவு:2024-04-05 17:03:26

பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் :

பட்டறைப்பெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ரூ.1.50 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் :

திருவள்ளூர் ஏப் 05 : நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19 ஆம் தேதி நடைபெறுகிறது.நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணைய உத்தரவின் பெயரில் தீவிர வாகன சோதனை நடைபெற்று வருகிறது.

அதன்படி ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள லலிதா ஜுவல்லரி நகைக்கடைக்கு சென்னையில் இருந்து கொண்டு சென்ற நகைகளை சப்ளை செய்துவிட்டு ஆந்திராவில் இருந்து ஒரு வேனில் திரும்பி வந்து கொண்டிருந்தனர்.பட்டறைபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வந்து கொண்டிருந்த வேனை மடக்கி சோதனை செய்ததில் அதில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒரு மணி நேரமாக நடைபெற்ற விசாரணையில் அதில் கிட்டத்தட்ட ரூ.1.50 கோடி மதிப்புள்ள தங்கம் இருப்பது தெரியவந்தது.ஆனால் உரிய ஆவணங்கள் இல்லாமல் நகையை கொண்டு வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலட்சுமி மற்றும் வாசுதேவன் ஆகியோர் வசம் ஒப்படைத்தனர்.தேர்தல் நடத்தும் அலுவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.