நடைபெற உள்ள 2024 தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் திருவள்ளூர் தனி தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா பேச்சு :

பதிவு:2024-04-05 17:11:27



நடைபெற உள்ள 2024 தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் திருவள்ளூர் தனி தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா பேச்சு :

நடைபெற உள்ள 2024 தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல் திருவள்ளூர் தனி தொகுதி தேமுதிக வேட்பாளரை  ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட பிரேமலதா பேச்சு :

திருவள்ளூர் ஏப் 05 : தமிழகத்தில் வருகிற 19-ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து அனைத்து அரசியல் கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.அதன்படி திருவள்ளூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திருவள்ளூரில் வாக்கு சேகரித்தார்.

திருவள்ளூருக்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த்தை முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளருமான பி.வி.ரமணா, முன்னாள் எம்பி வேணுகோபால், தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். இதி்ல் பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது, வேட்பாளர் கு.நல்லதம்பி உண்மையானவர். கேப்டனின் பிள்ளையாக வளர்த்தவர். அதனால் தான் 2011-ல் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினராக ஆக்கி அழகு பார்த்தவர் கேப்டன். அதனால் தான் 2024 நாடாளுமன்ற தேர்தலில் கேப்டன் விசுவாசத்திற்காக நல்லதம்பிக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேப்டன் ஆசிர்வாதம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆசீர்வாதத்தோடு திருவள்ளூர் தனி தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். டெல்லியில் இவரது குறல் எதிரொலிக்க நீங்கள் கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.

கேப்டன் விஜயகாந்தின் மறைவிற்குப் பிறகு நல்ல மனிதனை இழந்து விட்டதாக வருத்தப்பட்டீர்கள். நல்ல தலைவரை இழந்து விட்டோம் தமிழக மக்களும் வேதனை அடைந்தனர். கேப்டன் விஜயகாந்த் மக்களுக்காகவே வாழ்ந்தார். பொதுவாக ஒருவர் மறைவிற்கு பெண்கள் அழுவதை பார்த்திருக்கிறோம் ஆனால் ஆண்களும் லட்சக்கானவர்கள் அழுததை கேப்டன் மறைவின் போது தான் பார்த்தேன். கேப்டனின் மகன் விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரது தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு செல்வீர்களா என நிறைய பேர் கேட்டனர். ஆனால் 40 தொகுதிகளிலும் இருப்பவர்கள் எனது பிள்ளைகள். அதனால் நான் அனைத்து தொகுதிகளிலும் சென்று வாக்கு சேகரிப்பேன் என தெரிவித்தேன்.

எனக்குள் எவ்வளவோ துக்கங்கள் வேதனைகள், சோகங்கள் இருந்தாலும்... இந்த கூட்டணி நிச்சயம் நாளை சரித்திரம் படைக்கும். காரணம் நான் 40 தொகுதிகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்து வருகிறேன்.நான் கூட்டணி அமைப்பதற்கும் முன்பு திமுக கூட்டணி 40 தொகுதியிலும் வென்றெடுக்கும் என்று கருத்துக்கணிப்புகள் சொல்லியது. ஆனால் இன்றைய கருத்துக்கணிப்பில் அதிமுக- தேமுதிக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுமென தெரிவித்து வருகிறது. புரட்சித் தலைவர்,புரட்சித்தலைவி, புரட்சி கலைஞர் ஆகிய மூன்று தெய்வங்களின் ஆசிர்வாதத்தோடு நாம் வெற்றி பெறுவது உறுதி.ஜெயலலிதா மறைவுக்குப் பின் எடப்பாடி பொதுச் செயலாளராகவும், கேப்டன் மறைவிற்குப் பின் பிரேமலதா ஆகிய நான் பொதுச் செயலாளராகவும் ஆகி இருவரும் சந்திக்கும் முதல் தேர்தல் இதுவாகும். எத்தனையோ நிர்பந்தங்கள் எத்தனையோ மிரட்டல்கள் எத்தனையோ தடைகளையும் தாண்டி இந்த கூட்டணி அமைந்துள்ளது.இந்த தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் நடைபெறும் தேர்தல். இந்த தேர்தலில் நாம் வெற்றி கண்டே தீர வேண்டும்.

தேர்தல் வாக்குறுதிகளாக , திருவாலங்காடு ஒன்றியத்தில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையை விரிவுபடுத்தி நவீனப்படுத்தப்படும். அதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும். அதே போல் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் பூண்டி சத்தியமூர்த்தி நீர்த்தேக்கம் சுற்றுலாத் தளமாக அறிவித்தும் சீரமைக்கப்படால் இருப்பதால் இதனை சீரமைத்து திருவள்ளூர் மாவட்டம் வளர்ச்சியடைய நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் பழவேற்காடு முகத்துவாரம் தூர்வாரப்படும் என்பது போன்ற வாக்குறுதிகளையும் எடுத்துச் சொல்லி கொட்டும் முரசு சின்னத்தில் வாக்களி்க்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் பேசும் போது தெரிவித்தார். இந்த பிரச்சாரத்தின் போது அதிமுக, தேமுதிக, புரட்சிபாரதம், எஸ்டிபிஐ உள்பட கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.