பதிவு:2024-04-05 17:15:25
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள் : மாவட்ட தேர்தல் அலுவலர் த.பிரபு சங்கர்.பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் ஏப் 05 : திருவள்ளூர் மாவட்டம் மாதவரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் -2024 முன்னிட்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 212 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 6 வாக்குச்சாவடி மையங்கள் 90 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்று குறிப்பிட்ட நபருக்கு அதிக வாக்குப்பதிவு பெற்ற வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன.
அதன் அடிப்படையில் மாதவரம் சட்டமன்ற தொகுதியில் 475 வாக்குசாவடிகளில் 22 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், உள்ளன ஆகவே மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்பட்ட மாதவரம் லெட்சுமிபுரம் தொடக்கப்பள்ளி, மாதவரம் லெட்சுமிபுரம் மேல்நிலைப்பள்ளி, INFANT JESUS மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய்கோபால் கரோடியா மேல்நிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு அடிப்படை உட்கட்டமைப்புகளான குடிநீர் வசதி. கழிப்பறை வசதிகள் உட்பட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து, மாதவரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்படும் பாதுகாப்பு அறையின் பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில் பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வதஸ், மாதவரம் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கண்ணன் கொளத்தூர் துணை ஆணையர் பாண்டியராஜன், மாதவரம் வட்டாட்சியர் வெங்கடஜலபதி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.