தொழுவூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிக்கு மண் எடுப்பதில் விதிமீறல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் :

பதிவு:2024-04-07 17:35:55



தொழுவூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிக்கு மண் எடுப்பதில் விதிமீறல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் :

தொழுவூர் கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிக்கு மண் எடுப்பதில் விதிமீறல் கலெக்டர் அலுவலகத்தில் புகார் :

திருவள்ளூர் ஏப் 06 : திருவள்ளூர் அடுத்த தொழுவூர் கிராமத்தில் சர்வே எண்.598, 599-ல் அமைந்துள்ள ஏரிக்கு சொந்தமான நிலத்தில் தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணிக்காக மண் எடுக்க கடந்த ஒரு மாத காலமாக மாவட்ட கலெக்டரின் உத்தரவின் பேரில் குவாரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

இதன் அடிப்படையில் ஒரு நாளைக்கு சுமார் 150 நடைக்கு மேல் கனரக லாரியில் மண் எடுக்கப்படுகிறது. இதுவரை தோராயமாக 1500 லோடுகளுக்கு மேல் மண் ஓவர் லோடாகவும், பர்தாக்கல் மூடப்படாமலும் மண் எடுத்துச் செல்லப்படுகிறது.

இந்த மண்ணை எடுத்துச் செல்லும் லாரிகளுக்கு நடை ரசீது இல்லாமல் தேசிய நெடுஞ்சாலைப் பணியை தவிர்த்து கள்ளச் சந்தையில் தனி நபர்களுக்கு பல லோடு மண் விற்கப்படுகிறது.இது சம்மந்தமாக நேரில் சென்று பார்வையிட்டதில் அரசு விதிமுறைப்படி 0.90 மீட்டர் (3 அடி) ஆழம் எடுக்க வேண்டும். இதற்கு மாறாக சுமார் 6 அடிக்கு மேல் ஆழம் எடுக்கப்பட்டுள்ளது. நீளமும், அகலமும் குறிப்பிட்ட அளவுபடி இல்லாமல் அதிகமாக மண் எடுக்கப்பட்டுள்ளது.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி நேரிலும் 8-ஆம் தேதி பதிவு தபால் மூலமாகவும் மாவட்ட கலெக்டருக்கு பொதுமக்கள் சார்பில் மனுக்கள் கொடுக்கப்பட்டது.இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட எந்த ஒரு பதில் தகவலும் கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் எந்தவித சட்ட நடவடிக்கையும் மனுமீது எடுக்கவில்லை.எனவே மண் குவாரி விதிமுறைகளை மீறி தவறுகள் நடைபெறுவதால், இதன் அனுமதி உத்தரவை ரத்து செய்யும்படி பொது மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.