பதிவு:2024-04-07 17:37:46
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி உட்பட்ட பதற்றமான மற்றும் 90% மேல் வாக்குப்பதிவு வாக்குச்சாவடி மையங்கள் : மாவட்ட தேர்தல் அலுவலர் த பிரபு சங்கர் ஆய்வு :
திருவள்ளூர் ஏப் 06 : திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பதற்றமான மற்றும் 90% அதிகமான வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்களை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த பிரபு சங்கர் மக்களவைத் தேர்தல் -2024 முன்னிட்டு பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி (தனி) 170 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், 5 வாக்குச்சாவடி மையங்கள் 90% மேல் வாக்குப்பதிவு நடைபெற்ற வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் 212 பதற்றமான வாக்குச்சாவடி மையங்களும், 6 வாக்குச்சாவடி மையங்கள் 90 சதவீதத்திற்கு மேல் வாக்குப்பதிவு நடைபெற்று குறிப்பிட்ட நபருக்கு அதிக வாக்குப்பதிவு பெற்ற வாக்குச்சாவடி மையங்கள் உள்ளன. பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதியில் 70 பதற்றமான வாக்குச்சாவடி மையங்கள், 1 வாக்குச்சாவடி மையங்கள் 90 சதவீதத்திற்கும் மேல் வாக்குப்பதிவு நடைபெற்ற மையங்கள் உள்ளன.
ஆகையால் பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட உட்பட்ட வாக்குச்சாவடி மையங்களான மேல் மணம்பேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, திரு சுந்தரம் அரசினர் மேல்நிலைப்பள்ளி, திருமழிசை பிராயம்பத்து ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, புனித ஜோசப் நர்சரி மற்றும் தொடக்கப்பள்ளி, இந்து ஆரம்பப்பள்ளி, கரையான் சாவடி ஆர்.சி.எம் தொடக்கப்பள்ளி ஆகிய வாக்குச்சாவடி மையங்களை பார்வையிட்டு வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு எண்ணிக்கை அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து கேட்டறிந்து வாக்குப்பதிவு அனைத்து பணிகளும் முடிவு பெற்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, பூவிருந்தவல்லி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி மையங்களுக்கு கொண்டு செல்ல உள்ள தளவாடப் பொருட்கள், தேர்தல் பிரிவுகளின் செயல்பாடுகள், மின்னணு பாதுகாப்பு அறையின் பதிவேட்டினை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இதில் ஆவடி காவல் துறை துணை ஆணையாளர் ஐமன் ஜமால், பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வதஸ், ஆவடி காவல் துறை துணை ஆணையாளர் ஐமன் ஜமால், பூவிருந்தவல்லி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் கற்பகம், பூவிருந்தவல்லி நகராட்சி ஆணையர் லதா, பூவிருந்தவல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.