பதிவு:2024-04-07 17:39:25
திருவள்ளூரில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி : திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி (தனி) பார்வையாளர் அபு இம்ரான் கொடியசைத்து துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஏப் 06 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து மாவட்டத் தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபுசங்கர் மக்களவைத் தேர்தல் - 2024 முன்னிட்டு 100% வாக்களிப்பது அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட நிகழ்வினை திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி (தனி) பார்வையாளர் அபு இம்ரான் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
நம்முடைய இந்திய திருநாட்டின் ஜனநாயக திருவிழாவாக திகழக்கூடிய மக்களவைப் பொதுத் தேர்தல்-2024 ஏப்ரல் 19ஆம் தேதி அன்று நடைபெற உள்ளது அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்காளர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிகப் பிரமாண்டமான பலூன், கோலப்போட்டி, விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி இயக்கம், கையெழுத்து இயக்கம், உள்ளூர் கலைஞர் கொண்டு தெருக்கூத்து கலை நிகழ்ச்சி புதுமையாக மேளதாளத்துடன் வாக்காளர்கள் வீடுகளுக்கே நேரடியாக சென்று வாக்காளர் அழைப்பிதழ்களை வழங்கும் நிகழ்வு, தேர்தல் தூதுவர், தேர்தல் விழிப்புணர்வு நடமாடும் கண்காட்சி வாகனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சி வாயிலாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.
மேலும் இன்றைய தினம் இரு சக்கர வாகனம் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இரு சக்கர பேரணியானது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு சி வி நாயுடு சாலை வழியாக தலைமை மருத்துவமனை, ஆயில் மில் புகைவண்டி நிலையம், சென்று மீண்டும் நகராட்சி வழியாக உழவர் சந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தடைந்தது. ஆகவே பொதுமக்களாகிய நீங்கள் ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று ஜனநாயக முறைப்படி உங்கள் வாக்குகளை பதிவு செய்திட வேண்டும் என மாவட்டத் தேர்தல் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், பயிற்சி ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வதஸ், திருவள்ளூர் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தனலட்சுமி, திருவள்ளூர் நகராட்சி ஆணையர் சுபாஷினி, நேர்முக உதவியாளர் தேர்தல் சத்ய பிரசாத், உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், வட்டாட்சியர் வாசுதேவன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.