பூந்தமல்லி அடுத்த சொக்காநல்லூரில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவரை கஞ்சா போதையில் கத்தியால் வெட்டி விட்டு கொலை மிரட்டல் விடுத்த 6 பேர் கைது : இதில் 3 பேர் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர் :

பதிவு:2024-04-08 13:58:29

திருவள்ளூர் ஏப் 08 : பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வயலாநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் பென்னி(24). இவர் சொக்காநல்லுார் பகுதியில் இரவு சாலையோரம் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்ற 6 பேர் கொண்ட கும்பல் பென்னி மீது மோதுவது போல் சென்றனர்.

இதுகுறித்து பென்னி, ஏன் இடிப்பது போல் வருகிறீர்கள் என கேட்ட போது ஏற்பட்ட தகராறில் 6 பேரும் பென்னியை கத்தியால் வெட்டிவிட்டு கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். தகவலை அறிந்த வெள்ளவேடு போலீசார் பென்னியை மீட்டு சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.இதுகுறித்து பென்னி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

விசாரணையில் 6 பேரும் மேல்மண்பேடு பகுதியைச் சேர்ந்த முகேஷ் (20), தியாகராஜன்(18), சஞ்சய்(24) மற்றும் 17 வயது சிறுவர்கள் 3 பேர் என தெரியவந்தது. இவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததும், அதனால் பென்னியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததும் விசாரணையில் தெரியவந்தது.இதையடுத்து வெள்ளவேடு போலீசார் 6 பேரையும் கைது செய்தனர்.இதில் மூன்று பேர் சிறுவர்கள் என்பதால் அவர்களை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும் மற்ற மூன்று பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.