பதிவு:2024-04-09 10:02:59
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வருகிற 19-ஆம் தேதி அனைத்து தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், ஐடி, பிபிஓ உள்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை : மாவட்ட தேர்தல் அலுவல த.பிரபு சங்கர் தகவல் :
திருவள்ளூர் ஏப் 09 : நாடாளுமன்ற பொது தேர்தல் 2024, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான தேர்தல் வரும் 19-ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் வரும் 19-ஆம் தேதி அன்று வாக்கு பதிவு நடைபெற உள்ளதால் அனைத்து வாக்களர்களும் தேர்தலில் தவறாமல் வாக்களிக்க வேண்டியுள்ளதால் மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள், ஐசி. பிபிஓ.உள்பட அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மேற்படியான விடுப்பு நாளுக்கான ஊதியம் பிடித்தம் செய்யப்படக் கூடாது என சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் பொறுப்புள்ள அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு நிபந்தனைகள் மீறும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் மீது மக்கள் பிரிதிநித்துவ சட்டம் 1951 பிரிவு 135 (பி)-ன் படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த.பிரபு சங்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.