திருவள்ளூரில் 50 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாகாத்தம்மன் கோயிலை இடித்து தள்ளியதால் இரவு நேரத்தில் பக்தர்கள் குவிந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு

பதிவு:2024-04-09 10:06:38

திருவள்ளூர் ஏப் 09 : திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பேருந்து நிலையம் பின்புறம் உள்ள எம் ஜி எம் நகர் பகுதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு விவசாயம் செய்து வந்த இடத்தில் சுயம்புவாக நாகாத்தம்மன் தோன்றியதையடுத்து அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மனை வழிபட்டு வந்துள்ளனர். அப்பகுதி மக்கள் நாகாத்தாம்மனை குல தெய்வமாக வழிபட்டு அம்மன் கோவில்களில் செய்யப்படும் அனைத்து சடங்குகளையும் செய்து வழிபட்டு வந்தனர்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி இருந்ததால் தற்போது அந்த கோயிலை சீரமைக்க ஏதுவாக சிறிய கட்டிடம் ஒன்றை கட்ட தொடங்கி உள்ளனர். இதனையறிந்த தற்போதைய நிலத்தின் உரிமையாளராக இருப்பவர் தன்னுடைய நிலத்தில் ஆக்கிரமித்து கோயில் இருப்பதாக கூறி அடியாட்களுடன் வந்து புதிதாக கட்டப்பட்டு வரும் அந்த கோயிலை இடித்து தள்ளியுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் இரவு கோவில் முன்பு கூடினர்.

50 ஆண்டு காலமாக இப்பகுதி மக்களின் குலதெய்வமாக இருக்கும் நாகாத்தம்மன் கோயிலை இடித்து தள்ளிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதே இடத்தில் சுயம்புவாக தோன்றிய நாகாத்தமனை வழிபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையேல் தொடர் போராட்டம் நடத்தப் போவதாக பகுதி மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இரவு நேரத்தில் பொதுமக்கள் பெண்கள் கூடி போராட்டம் நடத்தியதால் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.